
புதுதில்லி: 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 8-ஆவது முறையாக சனிக்கிழமை தாக்கல் செய்து வருகிறார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே திருக்குறளுக்கு பதிலாக தெலங்கு கவிதையை கூறி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் நலன் என பத்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகயளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும்.
அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய திட்டம் தொடங்கப்படும்
அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம். சிறந்த வகை பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க திட்டம்.
கிசான் கடன் அட்டை மூலம் கூடுதல் கடன் வசதி.
நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் உருவாக்கப்படும்.
கடன் நடவடிக்கைகளுக்கு தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு அரசு ஆதரவு வழங்கும்.
கடன் வழங்குவதை மேம்படுத்த எம்எஸ்எம்இ-களுக்கான கடன் உத்தரவாதக் காப்பீட்டை அரசு உயர்த்தப்படும்.
கிசான் கிரெடிட் கார்டுக்கான வட்டி மானியத் திட்டத்திற்கான வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்
நுண் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரம்புடன் தனிப்பயனாக்க கடன் அட்டைகளை அறிமுகப்படுத்தப்படும்.
எம்எஸ்எம்இ-களின் முதலீடு மற்றும் வருவாய் வரம்பு அதிகரிக்கப்படும்
முதல் முறையாக பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு ரூ.2 கோடி கால கடன் திட்டம் தொடங்கப்படும்.
பிகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் நிறுவப்படும்.
தொழிலாளர் சார்ந்த துறைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் நாள்தோறும் பராமரிப்பு புற்றுநோய் மையத்தை அமைப்பதை எளிதாக்கும்.
நகர்ப்புற தொழிலாளர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டம் செயல்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 10,000 இடங்கள் சேர்க்கப்படும்; அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 இடங்கள் சேர்க்கப்படும்.
ஐந்து ஐஐடிகளில் கூடுதல் உள்கட்டமைப்பை உருவாக்கப்படும். பாட்னா ஐஐடி விரிவுபடுத்தப்படும்.
உலகளாவிய நிபுணத்துவத்துடன் திறன் மேம்பாட்டுக்காக 5 தேசிய மையங்களை அமைக்கப்படும்.
அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்.
இந்தியாவை உலகளாவிய பொம்மை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக இரட்டிப்பாக்கப்படும், உத்தரவாத கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்படும்.
காலணி மற்றும் தோல் துறைகளை ஊக்குவிக்க திட்டம் தொடங்கப்படும்.
நிறுவன இணைப்புகளுக்கான விரைவான ஒப்புதலுக்கான தேவைகள் மற்றும் நடைமுறைகள் விரிவுபடுத்தப்பட்டு செயல்முறை எளிமைப்படுத்தப்படும்
காப்பீட்டுத் துறையில் எப்டிஐ வரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.