அய்யனார் துணை தொடர் நாயகனுக்கு திருமணம்!

அரவிந்த் - விஜே சங்கீதா திருமணம் குறித்து...
அரவிந்த் - சங்கீதா
அரவிந்த் - சங்கீதா
Published on
Updated on
1 min read

தமிழும் சரஸ்வதியும் தொடர் பிரபலம் விஜே சங்கீதாவு தனது நீண்டநாள் காதலர் அரவிந்த் சேஜுவை கரம் பிடித்தார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக நன்கு அறியப்பட்டவர் விஜே சங்கீதா. இவர் அழகு சீரியல் மூலம் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் கனா காணும் காலங்கள் வெப் தொடரில் மலர் பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் அத்தொடரில் இருந்து விலகினார். இவர் சமீபத்தில் நிறைவடைந்த தமிழும் சரஸ்வதியும் தொடரில் 'வசு' பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதேபோல, கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அரவிந்த் சேஜு. இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். வெப் தொடர்கள், குறும்படங்கள் என யூடியூபில் நன்கு அறியப்பட்டவர்.

தற்போது, விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொடரான அய்யனார் துணை தொடரின் மதுமிதாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்

இதனிடையே, விஜே சங்கீதா கனா காணும் காலங்கள் வெப் தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் அரவிந்த் சேஜுவை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக முன்னதாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், அரவிந்த் சேஜு - சங்கீதாவுக்கு உற்றார் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இவர்களின் திருமண தொடர்பான விடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரவிந்த் - சங்கீதா தம்பதிக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.