திமுக அரசு எதிர் கட்சிகளுடைய ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது: வானதி சீனிவாசன்

திமுக அரசு எதிர் கட்சிகளுடைய ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது என வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினாா்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன்
பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன்
Published on
Updated on
2 min read

கோவை: திமுக அரசு எதிர் கட்சிகளுடைய ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினாா்.

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் தனியார் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதன்கிழமை பேரணி நடைபெற்றது.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

சமூக ஊடகங்களில் சிறு பதிவுகள் வந்தாலே இரவோடு இரவாக கைது செய்வது என்பது இன்றல்ல தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது.இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜகவினர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். எதிர்க் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல பத்திரிகையாளர்கள் கூட அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் குண்டாஸ் போடும் அளவுக்கு திமுக அரசு இருக்கிறது. பாஜகவையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்காத ஊடகங்களே கிடையாது. ஆனால் தமிழக அரசை விமர்சித்தால் பத்திரிகையாளர்கள் கூட தப்புவதில்லை.

அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்ட போது அவர்கள் அனைவரையும் கைது செய்து மிக மோசமான ஒரு இடத்தில் அடைத்து வைத்தார்கள்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று போராட்டம் நடத்தக் கூடிய சூழலில் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கிறது.

ஒருபுறம் நாள்தோறும் நடைபெறும் கொலை,கொள்ளைகள். அதே போல திமுகவை சேர்ந்தவர்கள் எவ்வளவு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை நாள்தோறும் செய்திகளில் பார்க்கிறோம்.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு முழுவதுமாக சீர் கெட்டுள்ளதை பார்க்கும் போது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

திராவிட மாடல் அரசு என்பது எல்லோருக்குமான அரசு என்று பெருமை பேசிக்கொள்ளும் திமுக, எதிர்க்கட்சிகளுடைய ஜனநாயக உரிமையை நசுக்க பார்க்கிறது என குற்றம் சாட்டினார்.

தில்லி தேர்தல், முடிவுகளை உற்சாகத்தோடு எதிர்நோக்கி காத்து இருக்கிறோம். இந்த முறை தில்லியில் மிகப்பெரிய மாற்றத்திற்கு மக்கள் தயாராகி இருக்கிறார்கள் என்பதை பிரசாரத்தின் போது எங்களால் உணர முடிந்தது. நல்ல ஒரு தீர்ப்பை இன்று அவர்கள் எழுத துவங்கி இருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு தேர்தலில் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தும் நான் மட்டுமே வெற்றியாளன் என்று களத்தில் ஒற்றை ஆளாய் நின்று கொண்டு இருக்கிற திமுகவிற்கு ஈரோடு மக்கள் என்ன மதிப்பு அளிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.போட்டி போட ஆளே இல்லாத சமயத்திலும் மக்களை அடைத்து வைப்பது பண பட்டுவாடா என அவர்களுடைய வேலைகளை பக்காவாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு கிரிமினல் குற்றத்திற்கான ஆதாரத்தை தமிழகத்தின் எதிர்க்கட்சியை சேர்ந்த மாநில தலைவர் அவருக்கு கிடைக்க கூடிய ஆதாரங்களை வெளியிடுகிறார் என்றால் அது தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானம், தலைகுனிவு என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், வளர்ச்சியையும், சுற்றுப்புற சூழலையும் நாம் சமநிலை செய்தாக வேண்டும். அறிவியல் தொழில் நுட்பம் நமக்கு கிடைக்கும் போது அதனுடைய வசதிகளை சமுதாயம் ஒதுக்கி வைத்துவிட முடியாது.

அதேசமயம் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்கள், செயல்கள் மூலமாக மரங்களை எப்படி காப்பாற்றுவது, நடுவது, எப்படி மாற்று வழிகளை யோசிப்பது போன்றவைகளில் தான் இன்றைக்கு இருக்கக் கூடிய இந்த கார்பன் நேச்சுரல் நாம் எதனை

நோக்கிச் செல்லும் போது சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க முடியும், வளர்ச்சியிலும் பின்தங்கிக் கொள்ளாமல் இருக்க முடியும். அரசாங்கம் இதற்கான மிகப்பெரிய முன்னெடுப்பை எடுக்க வேண்டும். அப்போது தான் இது நடக்கும்.

கோவை மெட்ரோ தொடர்பாக பேரவையில் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ச்சியாக பேசிக் கொண்டு தான் இருக்கிறேன்.அதற்கான பணிகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.மத்திய அரசு தரப்பில் இருந்து என்னெல்லாம் உதவி மாநில அரசுக்கு வேண்டுமோ? அதைப் பெற்றுத் தருவதில் நாங்கள் முன்னாள் இருப்போம்.

நேரம் கிடைத்தால் நாளை விடாமுயற்சி திரைப்படத்தை நிச்சயம் சென்று பார்த்து விடுகிறேன். ஒரு கட்சி ஆரம்பித்தவுடன் அதன் அறிவிப்பிலேயே இவ்வளவு குளறுபடிகள் இருக்கிறது என்றால் ஒரு அரசியல் இயக்கம் எப்படி? அடுத்த பரிமாணத்திற்கு செல்லும் என்பது ஒரு சந்தேகமாக இருக்கிறது என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com