எடியூரப்பாவுக்கு போக்சோ வழக்கில் முன்ஜாமீன்

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா
கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா
Published on
Updated on
1 min read

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

பெங்களூரு, சதாசிவநகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் தாக்கல் செய்திருந்த புகாரில், பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் 2024 ஆம் ஆண்டு பிப்.2ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த போது, தனது 17 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தாா்.

இதனடிப்படையில், பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப்பிரிவு சட்டப் பிரிவுகள் 354ஏ, 204, 214- இன்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) மாற்றி மாநில டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

ஜூன் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாததால், எடியூரப்பாவைக் கைது செய்ய கைது ஆணை பிறப்பிக்குமாறு பெங்களூரில் உள்ள முதலாம் விரைவு நீதிமன்றத்தை சிஐடி ஜூன் 13-ஆம் தேதி அணுகியிருந்தது. அதன்பேரில், எடியூரப்பாவைக் கைது செய்ய ஜாமீனில் வெளியே வரமுடியாத ஆணை பிறப்பித்து ஜூன் 13-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, தன் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள போக்ஸோ வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா முன் வெள்ளிக்கிழமை எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கினார். எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com