ரஷியப் பாடகர் வடிம் ஸ்ட்ரோய்கின்
ரஷியப் பாடகர் வடிம் ஸ்ட்ரோய்கின்

அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷியப் பாடகர் மர்ம மரணம்!

ரஷிய அதிபர் புதினை விமர்சித்த அந்நாட்டு பாடகர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதைப் பற்றி...
Published on

ரஷிய அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

ரஷியாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும் பாடகருமான வடிம் ஸ்ட்ரோய்கின் என்பவர் உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் படையெடுப்பை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார்.

மேலும், அவர் உக்ரைன் ராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பிப்.5 அன்று அந்நாட்டு காவல் துறையின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10வது தளத்திலுள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது விட்டின் சமையலறையின் ஜன்னல்களை திறக்கப்பட்டு மர்மமான முறையில் கீழே விழுந்தததில் அவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நியூயார்க்: 5 நாள்களுக்கு மூடப்படும் கோழிப் பண்ணைகள்!

முன்னதாக, போர் எதிர்பாளரான வடிம் ரஷியாவின் படையெடுப்பை எதிர்த்து தொடர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொண்டதுடன், அதிபர் புதினை ‘முட்டாள்’ எனக் கூறியதுடன் அவரது செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார்.

இதேப்போல், கடந்த 2024 நவம்பர் மாதம் அதிபர் புதினை விமர்சித்த ரஷிய நடனக் கலைஞரான விளாடிமிர் ஷ்க்ளியாரோவ் என்பவர் ஓர் கட்டடத்தின் 5வது தளத்திலிருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து பலியானார்.

அவரது மரணத்தை விபத்தாக பதிவு செய்த அந்நாட்டு அதிகாரிகள் அதிகப்படியான வலி நிவாரணி மாத்திரைகளை அவர் சாப்பிட்டதினால் இந்த விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com