விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும்: பிரேமலதா

விஜய் முதலில் மக்களைச் சந்திக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும்: பிரேமலதா
Updated on
1 min read

விஜய் முதலில் மக்களைச் சந்திக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

ஆளுங்கட்சி தங்களுடைய பிரச்னைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள எதையாவது ஒன்றை சொல்லி தப்பித்துக் கொள்ள பார்ப்பார்கள்.

எப்போதுமே மத்திய அரசை குற்றம் சாட்டும் தமிழக அரசு என்ன செய்கிறது? இந்தியாவில் அதிக கடன் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடுதான்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு சாதனை செய்தது தேமுதிக மட்டும்தான். தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதையும் படிக்க: பாலிவுட் இசையமைப்பாளர் அலுவலகத்தில் ரூ.40 லட்சம் திருட்டு

விஜய் எங்கள் வீட்டு பையன்; அதற்கு மாற்றுக்கருத்து இல்லை. சினிமா வேறு அரசியல் வேறு, இதை விஜய் இடம் நேரடியாக தெரிவித்திருக்கிறேன். சினிமாத் துறையில் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் அதை நாம் பாராட்ட வேண்டும். என்ன சாதிக்கப் போகிறார் என்ன சரித்திரம் படைக்கப் போகிறார் என்பதை பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம்.

அவர் அறையில் அமர்ந்து பேசுவதை விட்டுட்டு வெளியே வரவேண்டும் மக்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முஸ்லீம் மக்கள் அண்ணன் தம்பிகளாக பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடம் வராத பிரச்னை இப்போது வருகிறது. இதற்கு பின்னால் முற்றிலும் அரசியல் இருக்கிறது. மதத்தைப் பிரித்து ஜாதியைப் பிரித்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com