
அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவா்களை திருப்பி அனுப்புவதில் அதிபர் டிரம்ப் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் 104 இந்தியா்கள் தாய்நாட்டுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டனா்.
இதன் தொடர்ச்சியாக, 119 இந்தியர்களை நாடுகடத்தும் முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
இது பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு திரும்ப அனுப்புகிறது. அமெரிக்க விமானம் மூலம் 119 இந்தியர்களை இன்று கொண்டு வருகிறது.
அந்த 119 இந்தியர்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்களா என்பதே கேள்வி? அவர்கள் கைகளில் விலங்கு போடப்பட்டதா? அவர்கள் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டதா?
இந்திய ராஜதந்திரத்திற்குப் பெரிய சவால்! இந்திய ராஜதந்திரம் வெல்ல வேண்டும், இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.