துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் பதுங்கியுள்ள கட்டடம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் பதுங்கியுள்ள கட்டடம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

பிகார் தலைநகரில் துப்பாக்கிச் சூடு! சுற்றி வளைத்த பாதுகாப்புப் படை!

பிகாரில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளதைப் பற்றி...
Published on

பிகார் தலைநகர் பாட்னாவில் திடீரெனத் மக்கள் நிரம்பிய பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பதுங்கிய பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

கான்கர்பாக் பகுதியிலுள்ள ஓர் வீட்டின் வாசலில் இன்று (பிப்.18) மதியம் 2 மணியளவில் மர்ம நபர்கள் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பின்னர், அங்கிருந்து தப்பிய குற்றவாளிகள் அருகிலுள்ள ஓர் வீட்டினுள் சென்று பதுங்கிக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு அதிரடிப் படை மற்றும் பாட்னா காவல் துறையினர் இணைந்து தாக்குதல்காரர்கள் பதுங்கியுள்ள கட்டடத்தை சுற்றி வளைத்ததுடன் அவர்களை சரணடையுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், பாட்னா காவல் துறையின் உயர் அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ள நிலையில், தாக்குதல்காரகள் தப்பிச் செல்வதை தவிர்க்க சிறப்பு அதிரடிப் படையினர் அப்பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

இதுகுறித்து, அம்மாநில காவல் துறை உயர் அதிகாரி அவாகாஷ் குமார் கூறுகையில், நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், தற்போது வரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலில் மக்கள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பொது மக்கள் குவிந்துள்ளதினால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருவதாக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com