
நியூசிலாந்து நாட்டில் ஊழியரின் மீது ’கை’ வைத்த அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சராக பதவி வகித்தவர் ஆண்ட்ரூ பெய்லி, இவர் கடந்த பிப்.18 அன்று தங்களது வேலைக் குறித்த விவாதத்தின் போது, ஊழியர் ஒருவரின் கையின் மீது தனது கையை வைத்துள்ளார். இது அந்நாட்டில் பெரிய சர்ச்சையானதாகக் கூறப்படுகிறது.
இதனால், தனது செயலுக்கு பொறுப்பேற்று அவரது அமைச்சர் பதவி விலகுவதாகக் கூறி ராஜிநாமா கடிதத்தை கடந்த பிப்.21 அன்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், அவரது ராஜிநாமா கடிதம் ஏற்று கொள்ளப்பட்டதாக இன்று (பிப்.24) அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது ராஜிநாமா குறித்து மக்களுக்கு அறிவிக்க 3 நாள்கள் எடுத்துக்கொண்டதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி அங்கு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: உக்ரைனில் 200-க்கும் மேற்பட்ட டிரோன்களால் ரஷியா தாக்குதல்!
தனது ராஜிநாமா குறித்து பெய்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: அமைச்சரவைப் பொறுப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகள் குறித்து பொறுமையிழந்த நிலையில், ஊழியர்களுடன் நடந்த "அனிமேட்டட் கலந்துரையாடலின்" போது அந்த விவாதத்தை அளவுக் கடந்து மிக அதிகமாக எடுத்துச் சென்ற விட்டேன், அப்போது அந்த ஊழியரின் மீது எனது கையை வைத்தது முறையானதன்று, அதற்காக நான் வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இது போன்ற காலங்களில் நாம் நமது செயல்களுக்கு பொறுபேற்க வேண்டும் எனக் கூறிய அவர், அதனால் தனது செயலுக்கு பொறுபேற்று அவரது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக நியூசிலாந்து மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ரூ பெய்லி, 2024 அக்டோபரில் மது தயாரிக்கும் தொழிலாளி ஒருவரை "தோல்வியடைந்தவர்" (லூஸர்) எனக் கூறியதினால் அந்நாட்டினரால் மிகவும் விமர்சிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு சர்ச்சையினால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இருப்பினும், அவர் அந்நாட்டு மக்களவை உறுப்பினராகத் தொடருவார் எனக் கூறப்பட்டுள்ளாது.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டை ஆளும் பிரதமர் லக்ஸன் அரசில் பதவி விலகும் முதல் அமைச்சர் ஆண்ட்ரூ பெய்லி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.