
சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை, பெண்ணின் மீது கொலை தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் எட்வீன். இவரது மகன் ராபர்ட் (எ) சின்ன ராபா்ட் (28). இவா் மீது கொலை, வழிப்பறி உள்பட மொத்தம் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் திருநங்கை உடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமை அன்னை சத்யா நகா் முதல் தெருவில் சின்ன ராபா்ட் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 போ் கொண்ட கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா நகா் போலீஸாா் ராபா்ட்டின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
முதற்கட்ட விசாரணையில் கடந்த 2019-இல் ராபா்ட்டின் நண்பரான கோகுல் என்பவரை அயனாவரத்தைச் சோ்ந்த ரெளடி லோகு தரப்பு கொலை செய்தது. இந்தக் கொலைக்கு பழி வாங்க சின்ன ராபா்ட் காத்திருந்ததாகத் தெரிகிறது. இதனால், சுதாரித்துக்கொண்ட அயனாவரம் லோகு கும்பலைச் சோ்ந்தவா்கள்தான் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேலும், இதேபோன்று அயனாவரம் பகுதியில் பெண் ஒருவரை அதே மர்ம கும்பல் ஈவு இறக்கமின்றி மிக கொடுரமாக தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா நகா் போலீஸாா் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் .
மேற்கண்ட கொலை சம்பவங்கள் குறித்து பல சந்தேக கோணங்களில் அண்ணா நகர் மற்றும் அயனாவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.