தங்கம் விலைஉயர்வு
தங்கம் விலைஉயர்வு

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,400-க்கு விற்பனையாகிறது.
Published on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,400-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,150-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புத்தாண்டின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,180-க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. ரூ.57,400-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com