யானைகளை சீண்டியதால் விபரீதம்! ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்!

ஒடிசாவில் யானை தாக்கியதில் ஒருவர் பலியானதைப் பற்றி..
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஒடிசாவின் மயூர்பஞ்சு மாவட்டத்தில் வனத்துறையின் எச்சரிக்கையை மீறி கிராமத்துவாசிகள் யானைகளை சீண்டியதைத் தொடர்ந்து அந்த கூட்டதைச் சேர்ந்த யானை ஒன்று தாக்கியதில் ஒருவர் பலியானார்.

அம்மாநிலத்தின் உடாலா வனப்பகுதியில் ஆண், பெண் மற்றும் குட்டிகள் என 43 யானைகளைக் கொண்ட கூட்டம் ஒன்று பரிப்படா வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி வனத்துறையினர் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒலிப்பெருக்கிகளைக் கொண்டு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று (ஜன.2) மதியம் படாஷி பகுதியில் அந்த யானைக்கூட்டம் வந்தப்போது எச்சரிக்கைகளை மீறி அவற்றைக் காண கிராமவாசிகள் திரண்டுள்ளனர். பின்னர் அந்த கிராமவாசிகளில் சிலர் யானைகளை நோக்கி கற்களை வீசித் தாக்கி அதனை சீண்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால், எரிச்சசலைந்த ஆண் யானை ஒன்று அந்த கிராமவாசிகளை நோக்கி கோவமாக விரட்டியப்படி ஒடி வந்துள்ளது. அப்போது சிதறி ஓடிய கூட்டத்திலிருந்து தவறி கீழே விழுந்த 3 பேரை அந்த யானை தாக்கியுள்ளது.

இதையும் படிக்க: உ.பி: இரட்டை கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

அந்த தாக்குதலில் தன்போட்டா கிராமத்தைச் சேர்ந்த திலீப் சிங் (வயது-35) என்பவர் பலியானார். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அம்மாநில காவல்துறையினர் திலீப் சிங்கின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரது குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாதக்கணக்கில் தொடச்சியாக அந்த யானைக் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து, மேற்கு வங்கம் சென்று தற்போது ஒடிசாவினுள் நுழைந்துள்ளது.

நேற்று நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் தன்போட்டா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com