ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? - தமிழிசை கேள்வி

திமுக போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தது எப்படி? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி.
tamilisai
தமிழிசை சௌந்தரராஜன்ENS
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி எந்தவித உரையையும் நிகழ்த்தாமல் திரும்பிச் சென்றார்.

இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மாண்பை ஆளுநர் சீர்குலைப்பதாகவும், தமிழக முன்னேற்றத்தில் தடையாக இருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மாவட்டத் தலைநகரங்களில் திமுக முக்கிய தலைவர்கள் தலைமையில் இன்று(செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து திமுக போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தது எப்படி? என முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது பிரிவினைவாதம் என்று சொன்னால் அதை தமிழக அரசுதான் புதிதாக கற்பிக்க முடியும்.

வேங்கை வயல் விவகாரம், ஆண்ட பரம்பரை என திமுக அமைச்சரே கூறியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? திமுகவினர்தான் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.

கடந்த 10 நாள்களில் ஆயிரக்கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் கைதானார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஆளும் கட்சிக்கு அனுமதியா?

எந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்? நாங்கள் 5 நாள்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்? ஆனால் ஆளும் கட்சியினர் நேற்று அனுமதி பெற்று இன்று போராட்டம் நடத்துகிறார்கள்.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஜனநாயகம் இல்லவே இல்லை' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com