தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று(ஜன. 12) கைது செய்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று(ஜன. 12) கைது செய்தனர்.

கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களின் இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கைக் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: இன்றுடன் நிறைவு - சென்னை புத்தகக் காட்சி!

படகுகளையும், மீனவா்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com