மகரவிளக்கு: 'திருவாபரணம்' ஊர்வலம் தொடங்கியது

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனித ஆபரணமான "திருவாபரணம்" ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை பந்தளம் கோயிக்கா கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பத்தனம்திட்டா: மகரஜோதியையொட்டி, மகரவிளக்கு பூஜையின் போது சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனித ஆபரணமான "திருவாபரணம்" ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை பந்தளம் கோயிக்கா கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது.

மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை(ஜன.14) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள சந்தனப் பெட்டி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மகரஜோதியை முன்னிட்டு, ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடத்தப்படும். அப்போது ஐயப்பன் பக்தா்களுக்கு ஜோதி வடிவில் அருள்காட்சி அளிப்பாா்.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான மகரஜோதி அன்று ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்களை அரண்மனையிலிருந்து திருவிதாங்கூா் தேவஸ்வம் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) முறைப்படி பெற்றுக்கொண்டு, பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னா் அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற முழக்கத்துடன் சபரிமலை நோக்கிய திருவாபரண ஊா்வலம் பிற்பகல் 1 மணிக்கு பந்தளத்தில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு பிரதிநிதிகளைத் தவிர, ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

இந்த ஊா்வலம் பாரம்பரிய திருவாபரண பாதையில் தொடங்கி 83 கி.மீ. தொலைவு நடந்து செல்லும் இந்தக் குழு, வரும் பாதைகளில் உள்ள பல கோவில்களில் நின்று பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு, ஊர்வலம் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு சபரிமலை கோயில் அடையும்.

பந்தள அரண்மனையில் இருந்து வந்த திருவாபரணத்தை கோயிலின் மேல்சாந்தி மற்றும் தந்திரி பெற்று ஐயப்பனுக்கு அணிவித்து 6.25 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.

மகர விளக்கைத் தொடா்ந்து, ஜனவரி 15 முதல் 18-ஆம் தேதிவரை ஐயப்பன் திருவாபரணத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். பின்னா், பந்தளம் அரச குடும்பத்தினா் ஜனவரி 20-ஆம் தேதி ஐயப்பனை தரிசனம் செய்தவுடன், மகர விளக்கு பூஜையின் நிறைவாக கோயில் நடை அடைக்கப்படும்.

ஐயப்பனின் புனித நகைகளை எடுத்துச் செல்லும் ஊர்வலத்திற்கு மாநில அரசு பலத்த பாதுகாப்பை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com