
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர்.
கஞ்சம் மாவட்டத்தின் முஜகடா வனப்பகுதியில் இருந்து சரப்படா கிராமத்தினுள் இன்று (ஜன.14) அதிகாலை காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. அப்போது, அந்த யானையை கண்டதும் அப்பகுதியின் தெருநாய்கள் அனைத்தும் குரைத்துள்ளன. இதனால், அந்த நாய்கள யானை விரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த சத்தம் கேட்டு தஙக்ளது வீட்டைவிட்டு வெளியே வந்த திரிலோச்சன் மந்த்ரி (வயது 43) மற்றும் அவரது மகளான குஷி (8) ஆகிய இருவரையும் அந்த யானை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் அவர்களோடு இருந்த அவரது மனைவி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
இதையும் படிக்க: இசையமைப்பாளர் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது!
இந்நிலையில், அவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த யானையை விரட்டி படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தினால், அந்த கிராமத்தில் வனத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அப்பகுதியில் சுமார் 26 யானைகளைக் கொண்ட யானை கூட்டமொன்று சுற்றி வருவதாகவும், இரவு நேரங்களில் ஊருக்குள் வரும் யானைகள் இதுவரை சுமார் 10 வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த கூட்டத்தைச் சேர்ந்த யானைகள் தாக்கியதில் இதுவரை 3 பேர் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.