
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டுகள் வெடித்து 2 மத்திய ரிசர்வ் காவல் படையினர் படுகாயமடைந்தனர்.
பிஜப்பூர் மாவட்டத்தின் பஸகூடா காவல் நிலையத்தின் எல்லக்குட்ப்பட்ட காட்டுப் பகுதியில், இன்று (ஜன.16) காலை மத்திய ரிசர்வ் காவலின் 229 பட்டாலியன் படையினர் மற்றும் 206 கோப்ரா படையினரும் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நக்சல்கள் பொருத்தியிருந்த ஐ.ஈ.டி எனும் நவீன வெடிகுண்டுகளை அறியாமல் அதனை தூண்டியதில் அது வெடித்து கோப்ரா படையைச் சேர்ந்த ம்ரிதூல் பார்மன் மற்றும் முஹம்மது இஷாக் ஆகிய இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதையும் படிக்க: ரூ.2,000 கோடிக்கு களைகட்டிய சேவல் பந்தயம்! வேடிக்கை பார்த்தே ரூ.1.25 கோடி வென்ற சேவல்!
இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் உடனடியாக பசகுடாவிலுள்ள சி.ஆர்.பி.எப் முகாமிற்கு அழைத்துசெல்லப்பட்டு அங்கிருந்து ராய்ப்பூரிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு வீரர்களும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிஜப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில் ரோந்து பணி செல்லும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து காடுகளின் பாதைகளில் மாவோயிஸ்டுகள் வெடி குண்டுகளை பொருத்தியுள்ளனர். இதனால், அதை அறியாமல் அங்கு செல்லும் பொதுமக்கள் உள்பட பலர் அந்த வெடிகளுக்கு அவ்வப்போது பலியாகி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.