92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழக அரசியலின் அதிசயம் எம்ஜிஆர்: விஜய் வாழ்த்து!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளுக்கு விஜய் புகழாரம்.

News image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

Updated On :17 ஜனவரி 2025, 6:59 am

DIN

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது பற்றி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்.

அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

எம்ஜிஆரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடியும் புகழாரம் சூட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.