சூடான உணவை ஆறவைக்கும் பூனை! ஜப்பான் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு!

ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ள சிறிய ரக ரோபோ குறித்து...
புதிய ரோபோ நெக்கோ-ஜிட்டா
புதிய ரோபோ நெக்கோ-ஜிட்டா
Published on
Updated on
1 min read

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம், சூடான உணவை ஊதி ஆறவைக்கும் சிறிய பூனை வடிவிலான ரோபோவை கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் நடைபெற்ற செஸ் (CES 2025) வாடிக்கையாளார்களுக்கான தொழில்நுட்ப கண்காட்சியில் டோக்கியோவைச் சார்ந்த யூகாய் இஞ்சினீயரிங் எனும் நிறுவனம் சூடான உணவை ஆறவைக்கும் சிறிய பூனை வடிவிலான ரோபோவை அறிமுகம் செய்துள்ளது.

குட்டி பூனையின் தோற்றத்தில் இரு கைகளை நீட்டியப்படி இருக்கும் இந்த எந்திரத்தை சூடாக இருக்கும் காபி கோப்பையின் அல்லது உணவு இருக்கும் பாத்திரத்தின் முனையில் பொருத்திவிட்டால், அதன் வாய் போன்ற துவாரத்தின் வழியாக உள்ளிருக்கும் ஃபேன் சுழன்று காற்றை வெளியே தள்ளி உணவின் சூட்டை தணிக்கிறது. இது பார்ப்பதற்கு அந்த பூனை காற்றை ஊதுவது போன்று இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: முசோலினியின் உடல் தலைகீழாக தொங்கவிடப்பட்ட இடத்தில் எலான் மஸ்க்கின் உருவ பொம்மை!

மனித கைகளுக்கு அடக்கமாக இருக்கும் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவிற்கு நெக்கோ-ஜிட்டா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த பெயருக்கு, ஜப்பனிய மொழியில் பூனையின் நாக்கு என்று அர்த்தம். பொதுவாக, சூடான உணவை சாப்பிட தயங்கும் நபரது நாக்கை ஜப்பானில் பூனையின் நாக்கு என்று வர்ணிப்பார்களாம். இதனால், இந்த ரோபோவிற்கு அந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பேட்டரியால் இயங்கும் இந்த ரோபோ 88 டிகிரி செல்சியஸ் அளவிலான சூடான உணவை வெறும் 3 நிமிடங்களில் 71 டிகிரி செல்சியஸாக குறைத்துவிடும் எனக் கூறப்படுகிறது.

தற்போது மேலும் அந்த ரோபோவில் புதிய முன்னேற்றங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு (2025) மத்தியில் ஜப்பான் நாட்டில் அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com