லிபியா போர் குற்றவாளி இத்தாலியில் விடுதலை.. அரசு விளக்கமளிக்க உத்தரவு!

இத்தாலியில் லிபியா நாட்டு போர்குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதைப் பற்றி...
விடுதலை செய்யப்பட்ட போர் குற்றவாளி நஜீம்
விடுதலை செய்யப்பட்ட போர் குற்றவாளி நஜீம்Dinamani
Published on
Updated on
1 min read

போர்குற்றவாளியாக கருதப்படும் லிபியாவை சேர்ந்த நபரை விடுதலை செய்ததற்கு பதிலளிக்குமாறு இத்தாலி நாட்டு அரசுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.

லிபியா நாட்டைச் சேர்ந்த போர்குற்றவாளியான ஒசாமா அல்மஸீரி நஜீம், குறித்து ஐசிசியின் நெதர்லாந்து பிரிவு அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த ஜன.19 அன்று இத்தாலி நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால், கடந்த ஜன.21 அன்று அவரை இத்தாலி விடுதலை செய்தது. பின்னர் அவர் அரசின் விமானம் மூலமாக லிபியா தலைநகர் திரிப்பொலி நகரத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

லிபியாவின் சிறப்பு பாதுகாப்புப் படையின் அதிகாரிகாயாக செயல்பட்ட நஜீம் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் திரிப்பொலியிலுள்ள மிட்டிகா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சிறைவாசிகளை கொலை செய்தததற்காகவும், கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை மற்றும் சித்ரவதை செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மனித சமூகத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்ததற்காகவும் மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காகவும் அவருக்கு எதிராக ஐசிசி பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், இத்தாலியில் கைது செய்யப்பட்ட நஜீம் தற்போது விடுதலை செய்யப்பட்டது குறித்து இத்தாலி நாட்டு அரசு விளக்கமளிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: லாஸ் ஏஞ்சலீஸில் மீண்டும் காட்டுத் தீ: 31,000 பேர் வெளியேற்றம்

ஆனால், இந்த விடுதலை குறித்து இத்தாலி நாட்டு பிரதமர் ஜியார்ஜியா மெலோனி மற்றும் அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஐசிசி உடனான அனைத்து உறவுகளையும் நீதி அமைச்சகம் கையாள்வதால், நீதித்துறை அமைச்சர் கார்லோ நோர்டியோவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை எனவும் நஜீமின் கைது முறையானதாக இல்லாததினால் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, திரிப்பொலியில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட லிபியாவின் அரசுடன் இத்தாலிய அரசு நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அவரது விடுதலை லிபியாவின் அழுத்ததினாலோ அல்லது அந்நாட்டினுடன் கொண்ட நட்புறவினாலோ அல்ல என்று இத்தாலி நாட்டு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com