பனி விழும் மலர் வனம் தொடரிலிருந்து ரயான் விலகல்! இனி இவர்தான்!

பனி விழும் மலர் வனம் தொடரிலிருந்து பிக் பாஸ் பிரபலம் ரயான் விலகல்.
ரயான், தேஜாங்
ரயான், தேஜாங்
Published on
Updated on
1 min read

பனி விழும் மலர் வனம் தொடரிலிருந்து பிக் பாஸ் பிரபலம் ரயான் விலகியுள்ளார்.

ஈரமான ரோஜாவே - 2 தொடரில் நாயகனாக நடித்த சித்தார்த் குமரனும் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்த வினுஷா தேவியும் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் தொடர் பனி விழும் மலர் வனம்.

அண்ணன் - தங்கை மற்றும் அக்கா - தம்பி இவர்களுக்கு இடையேயான பாசப் போரட்டமே இத்தொடரின் மையக்கரு. இத்தொடரில் சேரன் பாத்திரத்தில் தமிழும் சரஸ்வதியும் தொடர் பிரபலம் ரயான் நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக ஷில்பா நடிக்கிறார்.

ரயான்
ரயான்

ரயான் பிக் பாஸ் வீட்டுக்குச் சென்றதால், கதையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, சேரன் பாத்திரம் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதாகக் காண்பிக்கப்பட்டது. ரயான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று டிடிஎஃப் டிக்கெட்டைப் பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்றார்.

இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் மலர் தொடர்!

சில நாள்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், மீண்டும் பனி விழும் மலர் வனம் தொடரில் ரயான் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தொடரில் இருந்து இவர் விலகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

வெள்ளித் திரையில் ரயான் நடித்த மிஸ்டர் ஹெவுஸ் கீப்பிங் படம் நாளை(ஜன. 24) வெளியாகவுள்ள நிலையில், இனி ரயான் சினிமாவில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

தேஜாங்
தேஜாங்

மேலும், ரயான் நடித்த சேரன் பாத்திரத்தில் தேஜாங் நடிக்கவுள்ளார். நடிகர் தேஜாங் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com