48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுமி ரயில் மோதி பலி!

மகாராஷ்டிரத்தில் ரயில் மோதி சிறுமி பலியானதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜனவரி 2025, 10:05 am

மகாராஷ்டிர மாநிலம் பால்கார் மாவட்டத்தில் காதில் ஹெட்போன் அணிந்தப்படி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுமி, ரயில் மோதியதில் பலியானார்.

பால்காரின் மக்னே கிராமத்தைச் சேர்ந்த வைஷ்னவி ராவல் (வயது 16) எனும் சிறுமி, நேற்று (ஜன.23) மதியம் காதில் ஹெட்போன் அணிந்தப்படி சப்பாலே மற்றும் கெள்வே சாலை ரயில் நிலையங்களுக்கு மத்தியிலுள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். சிறுமியின் காதில் ஹெட்போன் அணிந்திருந்ததினால் அங்கு வந்துக்கொண்டிருந்த ரயிலை அவர் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த தண்டவாளத்தில் வந்த கொசுவெளி-அம்ரித்சர் அதிவிரைவு ரயில் சிறுமி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர், உடனடியாக அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்தவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, விபத்தாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியின் உடலை கூராய்வு சோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, மகாராஷ்டிர மாநிலத்தில் வதந்தியை நம்பி ரயிலை நிறுத்தி கீழே இறங்கிய பயணிகளின் மீது மற்றொரு ரயில் மோதியதில் 12 பேர் பலியாகினர். அந்த சம்பவம் நடந்த மறுதினமே சிறுமி பலியாகியிருப்பது பொது மக்களிடையே மேலும் சோகத்தை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.