சென்னை மெட்ரோ ரயில் சுற்றுலா அட்டை இனி கிடையாது!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு.
chennai metro train
சென்னை மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)DIN
Published on
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒருநாள் சுற்றுலா அட்டை மற்றும் 30-நாள் சுற்றுலாஅட்டையை பயணிகள் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

"சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுலாஅட்டை (1-நாள் சுற்றுலா அட்டை மற்றும் 30-நாள் சுற்றுலாஅட்டை) பிப்ரவரி 1, 2025 முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற மற்றும் எளிமையான பயணங்களை வழங்கி வருகிறது.

சுற்றுலா அட்டைகள் இனி பயன்படுத்தமுடியாது என்றாலும், பயணிகள் தங்கள் பயணத் தேவைகளுக்கு டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், க்யூஆர் குறியீடு அடிப்படையிலான பயணச்சீட்டுகள், ஒற்றை பயணடோக்கன்கள் மற்றும் தேசிய பொது போக்குவரத்து அட்டை(National Common Mobility Card) உள்ளிட்ட மாற்று பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் தொடர்ந்து பயணிக்கலாம்.

தேசிய பொது போக்குவரத்து அட்டை இப்போது எம்டிசி பேருந்துகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தடையற்ற பயண அனுபவத்தை வழங்குகிறது. எங்கள் பயணிகளின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் புரிதலுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மெட்ரோ பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முழுமுயற்சி எடுத்துவருகிறது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com