ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் இந்திய ராணுவ முகாமின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர்.
கத்துவா மாவட்டத்தின் பத்தோடி கிராமத்திலுள்ள ராணுவ முகாமின் மீது நேற்று (ஜன.24) இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதில் அந்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று (ஜன.24) மாலை பத்தோடி பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதை அறிந்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற தில்லி அரசு உறுதி: அதிஷி
இதனைத் தொடர்ந்து, ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க கத்துவா மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர்.
இந்தியாவின் குடியரசு நாளின் நிகழ்ச்சிகள் நாளை (ஜன.26) கொண்டாடப்படும் நிலையில் தற்போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதினால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.