
குடியரசு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் சாலையில் உழைப்பாளா் சிலை பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றினார்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை 7.55 மணிக்கு விழா மேடைக்கு வருகை தந்தார். தொடர்ந்து ஆளுநர் ஆர். என். ரவியை வரவேற்றார்.
ஆளுநா் ஆா்.என்.ரவி தேசிய கொடியை காலை 8 மணிக்கு ஏற்றி வைத்தார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டா் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது.
இதையும் படிக்க: குடியரசு நாள் விழா: பிரதமர் மோடி வாழ்த்து!
பின்னர், குடியரசு நாள் விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைத்த ஆளுநா், முப்படையினா், காவல் துறையினா், தேசிய மாணவா் படை, பல்வேறு காவல் பிரிவினா், வனம் மற்றும் தீயணைப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பிறகு, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம், காந்தியடிகள் காவலா் பதக்கங்கள், அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது. இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மெரீனா கடற்கரை காமராஜா் சாலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசுத் தினத்தையொட்டி சென்னையில் 18,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.