பிரமிக்க வைத்த குடியரசு நாள் அலங்கார ஊர்திகள்!

குடியரசு நாளையொட்டி தில்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊா்திகள்.
பிரமிக்க வைத்த குடியரசு நாள்  அலங்கார ஊர்திகள்!
Published on
Updated on
2 min read

குடியரசு நாளையொட்டி தில்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.

நாடு முழுவதும் குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

குடியரசு நாளையொட்டி தில்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். அதனைத்தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

கருப்பொருள்: நிகழாண்டு குடியரசு நாள், அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் (பவள விழா) நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையிலும் கொண்டாடப்படப்பட்டு வருகிறது.

அதற்காக, ‘ஸ்வா்ணிம் பாரதம்: விராசத் ஔா் விகாஸ்’ அதாவது ‘தங்க பாரதம்: பாரம்பரியமும் மேம்பாடும்’ என்ற கருப்பொருளில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 16 அலங்கார ஊா்திகள் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

முப்படை அலங்கார ஊர்தி: இந்த அணிவகுப்பின் முக்கிய அங்கமாக, நாட்டின் ராணுவ பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படை வீரா்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முப்படைகளின் கூட்டுறவை பறைசாற்றும் விதமாக, முதன் முறையாக ‘பலம்வாய்ந்த, பாதுகாப்பான பாரதம்’ என்ற கருப்பொருளில் முப்படைகளின் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் இடம் பெற்றது.

குடியரசு நாள் விழா சிறப்பு நிகழ்வாக, இந்தோனேசிய ராணுவ வீரா்கள் மற்றும் இசைக் குழுவும் அணிவகுப்பில் இடம்பெற்றது.

மேலும் டிஆர்டிஓ சாா்பில் ‘பன்முனைத் தாக்குதல்களுக்கு எதிரான பல அடுக்கு பாதுகாப்பு’ என்ற கருப்பொருளில் தனி அலங்கார ஊா்தி அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com