பான் கார்டு விண்ணப்பிக்கும் தளத்தில் தமிழைச் சேர்க்க வேண்டும்: விஜய் சேதுபதி
பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் வருமானத்துறையினர் நடத்திய நிகழ்ச்சியொன்றில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
”அரசு சார்ந்த சில விஷயங்களை தெரிந்துக் கொள்வதற்கு மற்றவர்களைக் கேட்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி, அவற்றின் சிக்கல்கள் போன்றவற்றை எளிமையாகத் தெரிந்துக் கொள்வதற்கு அரசு இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
இதையும் படிக்க: அபிநயாவுக்கு விரைவில் திருமணம்!
குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் கார்ட்டூன் விடியோவாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும். தமிழ் மொழியும் இருந்தால் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் அனைவரும் எளிதாகப் பயன்படுத்தலாம்.
வருமான வரி செலுத்துவது அவசியம். வருமான வரி செலுத்துவோருக்கு ஏதாவது பலன்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.