மாடுகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்த முடிவு!

மாடுகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்துவது குறித்து...
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்.
Published on
Updated on
1 min read

கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (ஜன. 30) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அதில், சென்னையில் கால்நடை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்த வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டது.

இதையும் படிக்க: காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு: மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டுக் கொட்டகைகள் திறக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக பேசின்பாலம் சாலையில் 100 மாடுகள் தங்க வைக்கும் அளவிற்கு 7.700 சதுர அடி பரப்பளவில் நவீன கொட்டகை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மைக்ரோசிப் எதற்கு?

வளர்ப்பு நாய்களுக்கு வயதாகிவிட்டாலோ அல்லது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலோ அவற்றை தெருவில் விட்டு விடுகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதைத் தடுக்கும் வகையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி, அதன் முழு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து கண்காணிக்க முடியும். மேலும், வளர்ப்பு நாய்கள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தால், அதை மைக்ரோசிப் உதவியுடன் கண்டறிந்து உரிமையாளரிடம் வழங்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com