ஈசிஆர் விவகாரம்: 4 பேர் கைது! 2 கார்கள் பறிமுதல்!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவத்தில் 4 பேர் கைது.
பெண்களை துரத்திய இளைஞர்கள்
பெண்களை துரத்திய இளைஞர்கள்
Published on
Updated on
1 min read

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பாலம் அருகே ஜன. 25 அன்று காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் வந்த சிலர், துரத்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பெண்கள் சென்ற காரை நடுரோட்டில் நிறுத்தி இளைஞர்கள் மிரட்டியதும், பெண்கள் காரை ரிவர்ஸில் எடுத்து வேகமாகச் சென்றுள்ளனர். உடனே இளைஞர்களும் மற்றொரு காரில் சென்று பெண்களை அவர்கள் வீடு வரை துரத்திச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கானத்தூர் போலீசார் தெரிவித்தனர்.மேலும் அந்த இளைஞர்களை கைது செய்ய பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் சந்துரு என்பவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் 3 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காரில் வந்த இளைஞர்களுக்கும் திமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com