தில்லியில் சட்டவிரோத மதுபானக் கடத்தல்: 3 பேர் கைது

தில்லியின் வடக்கு புறநகா்ப் பகுதியில் செயல்படும் சட்டவிரோத மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Liquor
Liquor
Published on
Updated on
1 min read

புது தில்லி: தில்லியின் வடக்கு புறநகா்ப் பகுதியில் செயல்படும் சட்டவிரோத மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், சட்டவிரோத மதுபானங்கள் ஏற்றப்பட்ட மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது:

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் எங்கள் குழுக்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. சோதனையின் போது, ​ரோஹிணி செக்டாா்-25 அருகே ஒரு வெள்ளை மாருதி ஈகோ காா் நின்று கொண்டிருந்ததை போலீஸ் குழு கண்டறிந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டபோது அதில், 5,000 குவாட்டா் பாட்டில்கள் (900 லிட்டா்) நாட்டு மதுபானம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த விகாஸ் (எ) சோனு பிஹாரியை (29) கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும், நகரத்தில் 100-க்கும் மேற்பட்ட சட்டவிரோத விற்பனையாளா்களுக்கு சட்டவிரோத மதுபானங்களை வழங்கியதாக விசாரணையின் போது தெரிய வந்தது.

இதேபோன்று பவானாவின் டிஎஸ்ஐஐடிசி அருகே ஒரு போலீஸ் குழு இரண்டு காா்களை மடக்கிப் பிடித்தது. அந்த காா்களில் 3,500 குவாா்ட்டா் பாட்டில்கள் மற்றும் 120 சட்டவிரோத மதுபான பாட்டில்கள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கார் ஓட்டுநா்களான ரவி காந்த் (35) மற்றும் பிகு (எ) நீரஜ் (29) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com