பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா தனது கணவர் பிரசன்னா மற்றும் மகனுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த நடிகை சிநேகா.
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த நடிகை சிநேகா.
Published on
Updated on
1 min read

கோவை: புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா தனது கணவர் பிரசன்னா மற்றும் மகனுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இந்த கோயில் 2 ஆம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. மேலும், அருணகிரிநாதர் மற்றும் கச்சப்ப முனிவரால் பாடப்பட்ட கோயிலாகவும் திகழ்கிறது.

புகழ்பெற்ற பட்டீஸ்வரர் கோயிலுக்கு கிரிக்கெட் வீரர் சேவாக் சமீபத்தில் சாமி தரிசனம் செய்தால், மேலும் நடிகர் சூர்யா, யோகி பாபு போன்ற நடிகர்களும் இந்தக் கோயிலின் வரலாற்று சிறப்பு அம்சங்களை அறிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இந்த பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா தனது கணவர் பிரசன்னா, மகன், தந்தை மற்றும் உறவினர்களுடன் வந்து சாமி தரிசனம்
பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா தனது கணவர் பிரசன்னா, மகன், தந்தை மற்றும் உறவினர்களுடன் வந்து சாமி தரிசனம்

இந்நிலையில், நடிகை சிநேகா தனது கணவர் பிரசன்னா, மகன், தந்தை மற்றும் உறவினர்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

அவர்கள், பட்டீஸ்வரரை வழிபட்டு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். அதன்பிறகு கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பால தண்டபாணி, பச்சை நாயகி அம்மன், நடராஜர் சன்னதிகளில் பக்தியுடன் வழிபட்டனர்.

பின்னர், கோயில் கொடிமரம் முன்பு விழுந்து வணங்கினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் கோயிலில் அமர்ந்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

நடிகை சிநேகா, பிரசன்னாவை கண்ட பக்தர்கள் அவர்களுடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நடிகை சிநேகா, பிரசன்னாவுடன் செல்பி எடுத்துக்கொண்ட பக்தர்கள்.
நடிகை சிநேகா, பிரசன்னாவுடன் செல்பி எடுத்துக்கொண்ட பக்தர்கள்.
Summary

Actress Sneha visited the famous Perur Patteswarar Temple with her husband Prasanna and son and had darshan of the deity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com