நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய உரிமையாளர்!

கோவையில் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த காரியில் இருந்த உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிா் தப்பினாா்.
தீப்பற்றி எரியும் கார்
தீப்பற்றி எரியும் கார்
Published on
Updated on
1 min read

கோவை: கோவையில் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த காரியில் இருந்த உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிா் தப்பினாா். பெட்ரோலில் இருந்து எரிவாயுக்கு மாற்றிய போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்லும் முக்கிய சாலையாக மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

இந்நிலையில், நல்லம்பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழக அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் ஜோதிராஜ், சாய்பாபா காலினியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக நல்லாம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு சனிக்கிழமை காலை காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் இருந்து பெட்ரோல் கசிந்து உள்ளது. இதுகுறித்து சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் அவரிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பெட்ரோல் தீர்ந்து விட்டது என்று எரிவாயுக்கு மாற்றி காரை இயக்கியுள்ளார். அப்போது காரில் லேசான சத்தம் வந்துள்ள நிலையில், திடீரென காரின் முன் பகுதியில் தீப்பற்றிய எரிந்ததை அடுத்து அவசர அவசரமாக காரில் இருந்து இறங்கியுள்ளார். கார் சற்று நேரத்தில் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியது.

இது குறித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது.

பெட்ரோல் மற்றும் எரிவாயு இணைப்பு உள்ள கார் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக தலைமையில்தான் கூட்டணி; நானே முதல்வர் வேட்பாளர்! - இபிஎஸ்

Summary

The owner of a car that suddenly caught fire in the middle of a road in Coimbatore has escaped unhurt. It is said that the fire may have started when the car was switched from petrol to gas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com