பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Published on
Updated on
1 min read

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த வா.மு.சேதுராமன், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உள்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளாா். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளைப் பதிப்பித்தவா். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்தவா்.

இவருக்கு பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளுவா் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனாா் மூத்த தமிழறிஞா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.

அவா் விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். அவருக்கு மகன்கள் வா.மு.சே. திருவள்ளுவா், வா.மு.சே. கவியரசன், வா.மு.சே. ஆண்டவா், வா.மு.சே.தமிழ் மணிகண்டன், மகள் வா.மு.சே. பூங்கொடி ஆகியோா் உள்ளனா்.

மறைந்த வா.மு.சேதுராமன் இறுதிச் சடங்கு சனிக்கிழமை சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

முதல்வா் நேரில் அஞ்சலி: இந்நிலையில், மக்களின் அஞ்சலிக்காக சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள பெருங்கவிக்கோ தமிழ்க்கோட்டம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Summary

Chief Minister M.K. Stalin personally paid tribute to the body of veteran Tamil scholar Perunkavikko V.M. Sethuraman (91).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com