பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் – தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பல ஆண்டுகளாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும்; அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய கோரிக்கையாக; பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்படியே மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய போராட்ட பந்தலுக்கு இரவு 12 மணிக்கு சென்று அவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக பழைய ஓய்வதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக உறுதி அளித்தார். மேலும் அவரது தேர்தல் வாக்குறுதியாக 2021-ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதாக உறுதி அளித்து இருந்தார்.

இன்று அவைகள் எல்லாம் மறந்து முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கிறார். தொடர்ந்து காலந்தாழ்த்துகிறார். தமிழ்நாடு முதல்வரை இந்த நான்கு ஆண்டுகளில் எட்டு முறை சந்தித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப் படவில்லை.

தமிழக முதல்வர் உடனடியாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை இந்த தமிழ் மண்ணில் மீண்டும் அமுல்படுத்திட வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில், "வெளி முகமை" (தற்காலிக ஊழியர்) பணியிடங்களை தவிர்த்து நிரந்தர பணியிடங்களை உருவாக்கிட வேண்டும், மாணவர்களின் கல்வியை மனதில் கொண்டு அரசு பள்ளிகளில் கிடைக்கின்ற காலி பணியிடங்களை உடனே இந்தக் கல்வி ஆண்டுக்குள் நிரப்பிட வழிவகை செய்ய வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Summary

PMK founder-leader Ramadoss has urged the Chief Minister to take immediate action to re-implement the old pension scheme for Tamil Nadu teachers and government employees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com