வெங்காயம் கலந்த உணவு பரிமாறியதால் ஹோட்டலை அடித்து நொறுக்கிய பக்தர்கள்!

புனித யாத்திரை சென்ற பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த உணவு பரிமாறிய ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு!
கன்வார் யாத்திரை பக்தர்கள்
கன்வார் யாத்திரை பக்தர்கள்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புனித யாத்திரை சென்ற பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த உணவு பரிமாறிய ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திங்கள்கிழமை(ஜூலை 7) இரவு, பர்காஸி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தில்லி - ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் ஃபலௌடா புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வந்த ஒரு தாபாவில்(சாலையோர உணவுக் கடை) உணவருந்திய கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற கான்வர் யாத்திரை பக்தர்கள் 20 பேர் அடங்கிய ஒரு குழுவுக்கு வழங்கப்பட்ட உணவில் வெங்காயமும் கலந்திருந்ததால் அவர்கள் அனைவரும் ஆத்திரமடைந்தனர்.

பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த உணவு கொடுக்கப்பட்டதால் அவர்கள் கோபத்தில் கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்ததாகவும், அதன்பின் கடையிலிருந்த நாற்காலிகள் மேஜைகளை தாக்கி சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து யார் மீதும் எந்த தரப்பும் புகார் தெரிவிக்காததால் வழக்கு பதியப்படவில்லை என்ரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com