தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க!: முதல்வர் ஸ்டாலின்

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி அவரது புகழ் வாழ்க என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியார், அண்ணா, கருணாநிதியுடன் தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பெரியார், அண்ணா, கருணாநிதியுடன் தவத்திரு குன்றக்குடி அடிகளார்
Published on
Updated on
1 min read

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி அவரது புகழ் வாழ்க என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று!

தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்!

சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர்!

சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தி அவர்களே பாராட்டிய ‘குன்றக்குடிக் கிராமத் திட்டம்’ கொண்டுவந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர்!

பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்!

இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர்!

முத்தமிழறிஞர் கலைஞரின் விருப்பத்தின் வழியே தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பேசிய பெருந்தகையாளர்!

தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல் உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45-ஆவது மகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க!

அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும்! என கூறியுள்ளார்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கருணாநிதியுடன் தவத்திரு குன்றக்குடி அடிகளார் இருக்கும் புகைப்படத்தையும் முதல்வர் ஸ்டாலின் இணைத்துள்ளார்.

Summary

Chief Minister M.K. Stalin has said that on the centenary of the death of Tavathiru Kundrakudi Adigal, his fame will be long.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com