சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 25 ஆம் தேதி காலஅவகாசம்!

சட்டக்கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி சட்டடப்படிப்பிற்கு நிகழ் ஆண்டு மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 25- ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப்படிப்பிற்கு நிகழ் ஆண்டு மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 25- ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி, மூன்றாண்டு எல்எல்பி(ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கான மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 25-ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது. இதை மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு பலனடையலாம்.

மாணவா்கள் www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

The deadline for registration of applications for current year students for the 3-year LLB law course in law colleges has been extended until July 25th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com