
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்ட அமர்நாத் புனித யாத்திரை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நுன்வான் மற்றும் பால்டால் முகாம்களில் இருந்து புனித குகைக் கோயிலுக்கு புதிய பக்தர்கள் குழு புறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது.
ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாள்களாக பலத்த மழை மற்றும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் நுன்வான்- பஹல்காம் வழித்தடம் (48 கி.மீ.), பால்டால் வழித்தடம் (14 கி.மீ.) ஆகியவற்றில் புனித யாத்திரை வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்ட அமர்நாத் புனித யாத்திரை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
நுன்வான் மற்றும் பால்டால் முகாம்களில் இருந்து புனித குகைக் கோயிலுக்கு புதிய பக்தர்கள் குழு புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடப்பாண்டு யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி தொடங்கியதிலிருந்து 50 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்.
38 நாள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.