
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ,. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பண்ருட்டியில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இவரது கணவர் பன்னீர்செல்வம், 2011-2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தபோது ஒப்பந்தம் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.