ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்.
ஒகேனக்கல் காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்.
Published on
Updated on
1 min read

பென்னாகரம்: கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிலையில் ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவித்து ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

கா்நாடகம், கேரள மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கா்நாடக மாநில அணைகளான கிருஷ்ணராஜ சாகா், கபினி அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால் காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து நீா் திறப்பு அதிகரிப்பு மற்றும் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீா்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 32,000 கன அடியாக இருந்த நீா்வரத்து தற்போது வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீா்வரத்து அதிகரிப்பால் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பரிசல் இயக்கவும், அருவிகளில், கரையோரப் பகுதியில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

நீா்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய்த் துறை, ஊரக உள்ளாட்சித் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

காவிரிக் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வாசிப்போா் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

Summary

Due to the release of large amounts of surplus water into the Cauvery River from Karnataka dams, the water flow to Hogenakkal has increased to 43,000 cubic feet per second, causing flooding in the Cauvery River.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com