மேட்டூர் உபரி நீர் திட்டத்தினை பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டுவர வேண்டும்: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம்

விவசாயத்துக்கு பயன்படும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை பனமரத்துப்பட்டி ஏரிக்கு செயல்படுத்துவது தொடர்பாக...
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
Published on
Updated on
1 min read

சேலம்: விவசாயத்துக்கு பயன்படும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை பனமரத்துப்பட்டி ஏரிக்கு செயல்படுத்தக் கோரி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டையில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சேலம் மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சுகுமார் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.

அப்போது, பனைமரத்துப்பட்டி ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை விவசாயத்துக்கு பயன்படும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தினை பனமரத்துப்பட்டு ஏரிக்கு கொண்டுவர வேண்டும்.

பனமரத்துப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்படும் அரளி பூவிற்கு குளிர்சாதன கிடங்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரியிலிருந்து உபரி ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்.

ஆத்தூரில் உள்ள கால்நடை பூங்காவிற்கு மல்லூர் வழியாக செல்லும் ராட்சச குழாயின் வழியாக மேட்டூரில் இருந்து நீரை கொண்டு செல்லும் நிலையில் அந்த நீரைக் கொண்டு சிறு குறு ஏரிகளை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களின் கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Summary

Regarding the implementation of the Mettur surplus water project to Panamarathupatti Lake for agricultural use...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com