கோவையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்: உ.பி.யைச் சேர்ந்தவர் கைது

கோவையில் வாகன தணிக்கையின்போது 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
கோவையில் வாகன தணிக்கையின்போது 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக  உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் வாகன தணிக்கையின்போது 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published on
Updated on
1 min read

கோவையில் வாகன தணிக்கையின்போது 21 கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

கோவையில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளில் எடுத்து வந்ததன் பேரில் தற்போது போதைப் பொருள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணன் சுந்தர் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர் தெற்கு உதயகுமார் மற்றும் குனியமுத்தூர் காவல் சரக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செல்வபுரம் ஆய்வாளர் அழகுராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தெலுங்கு பாளையம் வேடப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக டிஎன்66 பி 5423 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அமன்சிங் என்பதும், அவர் இரு சக்கர வாகனத்தில் சாக்கு பையில் அரசால் தடை செய்யப்பட்ட மன மயக்கம் , உடலுக்கு ஊறு விளைவிக்கும் சுமார் 21 கிலோ கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ.26,000, டிஜிட்டல் எடை இயந்திரம் 2, கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com