mk stalin
முதல்வர் மு.க.ஸ்டாலின்

இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை: இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்தில், ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க அதிக அளவில் மரங்கள் நட வேண்டும். மனிதா்களுக்கு மட்டுமின்றி பறவைகளும், விலங்குகளும் பாதுகாப்பாக வாழ்ந்திட மரம் அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான இந்நாளின் நோக்கம், 'நெகிழி மாசுவை முடிவுக்கு கொண்டு வருவோம்'என்ற கருப்பொருளை வலியுறுத்தி சைக்கிள் பேரணி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில், நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்! என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com