
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை(ஜூன் 19) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என பல தரப்பினரும் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில்...
எனது கருத்தியல் உடன்பிறப்பான ராகுல்காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
"இது ரத்த பந்தத்தால் அல்ல, சிந்தனை, தொலைநோக்கு மற்றும் நோக்கத்தால் பிணைக்கப்பட்டவர்கள் நாம்".
நீங்கள் தொடர்ந்து உறுதியாக நின்று துணிவுடன் வழிநடத்த வேண்டும். ஒளிமயமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில், வெற்றி நமதே என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராகுல்காந்தியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.