திரையுலகில் நீண்ட காலமாக போதைப்பொருள் பழக்கம் இருக்கிறது: விஜய் ஆண்டனி

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
Published on
Updated on
2 min read

மதுரை: திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. புகைப்பிடிப்பதும் போதைப் பழக்கம்தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைப்பொருள் பயன்பாடு என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்படத் துறையினரின் போதைப் பொருள் பழக்கம், கடத்தல், விற்பனை தொடா்பான தகவல்களைத் திரட்டும் வகையில் சிறையில் இருக்கும் ஸ்ரீகாந்தை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

அதேபோல சங்கிலித் தொடா்போல இருக்கும் போதைப் பொருள் கும்பலைச் சோ்ந்த அதிமுக முன்னாள் நிா்வாகி பிரசாத், பிரதீப்குமாா், கானா நாட்டைச் சோ்ந்த ஜான் ஆகியோரையும் ஒரே நேரத்தில் காவலில் எடுக்க காவல் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும், கழுகு திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள கிருஷ்ணாவிடம் விசாரணை செய்ய திட்டமிட்ட காவல் துறையினா், கிருஷ்ணா கேரள மாநிலத்தில் படப்பிடிப்பில் உள்ளதால் அங்கு விரைந்துள்ளனா்.

கிருஷ்ணா போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் நேரடி தொடா்பு வைத்துக் கொண்டு, கொகைன் வாங்கியிருப்பதை போலீஸாா் கண்டறிந்துள்ளனா்.

இந்நிலையில், திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. புகைப்பிடிப்பதும் போதைப் பழக்கம்தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைப்பொருள் பயன்பாடு என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெலியாகும் திரைப்படம் மார்கன். இந்த படத்தின் ப்ரோமோஷன் விழா மதுரை சின்ன செட்டிகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விஜய் ஆண்டனி செய்தியாளர்களுடன் பேசியதாவது.

மதுரையை பொறுத்து கதைக்களம் அமைந்தால் படம் நடிப்பேன். மதுரை மக்களின் இயல்பு அன்பு மிகவும் பிடிக்கும். எத்தனை ஏஐ வந்தாலும் இதயத்தை தொடும் பாடல்களை உருவாக்க முடியாது. இயக்குநர் உடனான நட்பின் அடிப்படையில் மார்கன் படத்தை தானே தாயரித்துள்ளேன். சக்தி திருமகன் திரைப்படத்திற்கு பின்பு அனனைத்து நடிகர்களுக்கும் இசையமைக்க திட்டமிட்டுள்ளேன். மற்ற நடிகர்களையும் வைத்து தயாரிக்க இருப்பதாக கூறினார்.

மேலும், போர் மிகவும் தவறானது. மிகவும் வருத்தமாக உள்ளது. காஸாவில் குழந்தைகள் கதறுவது மனதுக்கு வேதனை தருகிறது. போரை அறிவிப்பவர்கள் சண்டை செய்யட்டும். அப்பாவி மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது என்றார்.

நடிகர்கள் ஆளக்கூடாது என விதியல்ல

நடிகர்கள் ஆளக்கூடாது என விதி எதுவுமில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றோர் ஆண்டுள்ளனர். தனிப்பட்ட செல்வாக்கு மக்கள் ஆதரவு இருந்தால் ஆளலாம்.நான் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றார். .

மேலும், திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. புகைப்பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதனுடைய அடுத்த கட்டம் தான் போதைப்பொருள் பழக்கம். நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதால் அதுகுறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com