போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது மோடி அரசு: அமித் ஷா

போதைப்பொருள் இளைஞர்களுக்கு மிகப்பெரிய துன்பம், மோடி அரசு போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது
மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய அமைச்சர் அமித் ஷா
Published on
Updated on
1 min read

புது தில்லி: போதைப்பொருள் இளைஞர்களுக்கு மிகப்பெரிய துன்பம், மோடி அரசு போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது, போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களை பச்சாதாபத்துடன் இயல்பு வாழ்க்கைக்கு மீட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

'ஜூன் 26 ஆம் தேதி சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிா்ப்பு தினத்தை' முன்னிட்டு 'போதைப்பொருள் இல்லாத இந்தியாவுக்கான' போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,

போதைப்பொருள் நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய துன்பம். போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரக்கமின்றி தண்டித்து வருகிறது, போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களை இரக்க மனபான்மையுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், போதைப்பொருள் துஷ்பிரயோக அச்சுறுத்தலுக்கு எதிரான நாட்டின் உறுதியை இந்த நாள் மேலும் வலுப்படுத்தும் என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Summary

Drugs are the biggest scourge for the youth and the Modi government is striking narco-cartels ruthlessly and bringing back the addicted youth to normal life with empathy, Union Home Minister Amit Shah said on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com