கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மணிப்பூர்: கிளர்ச்சியாளர் உள்பட 5 பேர் கைது!

மணிப்பூரில் கிளர்ச்சியாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் ஒருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் இன்று (மா.1) தெரிவித்துள்ளனர்.

காங்போக்பி மாவட்டத்தின் பிம்பாரோ பகுதியில் தடைசெய்யப்பட்ட குக்கி நேஷனல் பிரண்ட் என்ற அமைப்பின் கீழ் பணியாற்றி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், கம்ஜோங் மாவட்டத்தின் இந்திய - மியான்மர் எல்லையின் அருகிலுள்ள குல்டுஹ் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட மற்றொரு அமைப்பான பீபள்ஸ் லிபரேஷன் ஆர்மியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (பிப்.28) பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: கோதுமை கொள்முதல்: 31 மில்லியன் டன் இலக்கு நிர்ணயம்!

மேலும், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மணிப்பூரின் 5 மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் முன்வந்து தங்களது ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் நேற்று (பிப்.28) ஒப்படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com