
உத்தரப் பிரேதசத்தில் பசு வதைச் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 2 பேரை காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர்.
ஹாப்பூர் மாவட்டத்தில் காவல் துறையினர் பசு வதை செய்யப்படக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட இடங்களில் நேற்று (மார்ச் 6) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பட்ரகா வனப்பகுதியில் பசுமாட்டின் அழுக்குரல் கேட்டு அங்கு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் அங்கு சென்றபோது சந்தேகப்படும்படியான இரண்டு பேர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு காவல் துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் இருவரது கால்களிலும் குண்டுகள் பாய்ந்து கீழே விழுந்தனர்.
இதையும் படிக்க:விராட் கோலி குடிக்கும் கருப்பு தண்ணீர் விலை என்ன? கருப்பாக இருக்குமா?
பின்னர், படுகாயமடைந்த சல்மான் மற்றும் நவுஷாத் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகளும், இருசக்கர வாகனமும், பலியிட தடைசெய்யப்பட்ட விலங்கு மற்றும் அதனை பலியிட பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் இருவரின் மீதும் பிஎன்எஸ் மற்றும் விலங்கு வதை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.