ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இளையராஜாவால் இந்தியாவுக்கே பெருமை: ரஜினிகாந்த் வாழ்த்து

லண்டனில் சிம்பொனி அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

இளையராஜாவுக்கு நடிகர் ரஜினகாந்த் வாழ்த்து

Updated On :8 மார்ச் 2025, 4:33 am

DIN

லண்டனில் சிம்பொனி அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வேலியண்ட் என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றுவதற்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டன் சென்றிருக்கிறார். இன்று லண்டனில் அவர் தமது சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவும், சிறப்பாக அமையவும் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது.

சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.