போதைப் பொருள் வழக்கில் சிக்கிய முன்னாள் ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர்!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியதைப் பற்றி...
ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில்
Published on
Updated on
1 min read

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் மெக்கில் (வயது 54), கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் சுமார் 3,30,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1 கிலோ அளவிலான கொக்கைன் எனும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு சிட்னி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெக்கில் தனக்கு வழக்கமாக போதைப் பொருள் வழங்கும் நபரை அவருக்கு சொந்தமான உணவகத்தில் தனது உறவினரான மரினோ சோட்டிரோபோலோஸ் என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் இதன் மூலம் அந்த போதைப் பொருளானது கடத்தப்பட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் லீக்: பெனால்டியில் வென்ற ரியல் மாட்ரிட்..! காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வு!

இதனை, அவர் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் மெக்கில்லின் ஈடுபாடு இல்லாமல் இந்த கடத்தலானது அரங்கேறியிருக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றங்களிலிருந்து அவரை விடுதலை செய்தது. இருப்பினும், இந்தக் கடத்தலில் அவருக்கு ஈடுபாடு உள்ளதால் அந்தக் குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை அவருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தண்டனை அறிவிப்பை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுழல்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் மெக்கில் ஆஸ்திரேலியா அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 208 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com